உங்கள் கதாநாயகிகளைப் போல வாழ முயற்சிப்பதாக சிலர் சொல்லும்போது பயமாக இருக்கும். தவறான எண்ணங்களைத் தூண்டி விட்டுவிடக் கூடாது அல்லவா?

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று, என்னைக் கவர்ந்த இடங்கள், காட்சிகளைப் பெரிதும் கதைகளில் கொண்டு வருவேன்.

முக்கியமாகக் கடல். அதன் அலைகள், நிலவின் ஒளியில் பல்லாயிரம் வெள்ளி முகடுகளோடு அதன் அழகு. பொன் மணல் பரப்பு...

கடற்கரையில் வீடு இருந்ததால், நான் ரசித்தவை எல்லாம் கதைகளில் வந்திருக்கின்றன.

ஆனால், சுனாமி வந்த பிறகு, என்னவோ, கடலில் நான் பழைய அழகைக் காணவில்லை, காணமுடிவதில்லை.

சென்னையில் சுனாமி வருவதற்கு சுமார் பத்தே நிமிஷங்களுக்கு முன்பாக, கடற்கரைச் சாலை வழியே சென்றிருக்கிறேன், என் வழக்கம் போலவே, கடலைத் திரும்பிப் பார்த்து ரசித்த படியே. முக்கால் மணி நேரம் கழித்துத திரும்பி வந்தால், அந்த வழியே வருவதற்கு போலிஸ் விடவில்லை. ராணி மேரிக் கல்லூரிவரை, கடல் நீர். அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு கிரிக்கெட் ஆடிய சிறுவர்கள், பாண்டை மடித்த்துவிட்டுக்கொண்டு, கடல் நீரில் கால் நனைத்து நின்ற இளைஞர்கள் எல்லோரும் என்ன ஆகியிருப்பார்கள்?

அதை மறக்க முடியாததாலேயே, இன்று கடலும் அழகிழந்து போயிற்று.

கல்ல்லூரிக் காலத்தில் சுற்றுலா சென்றபோது பார்த்த இடம், கொச்சி அருகில் உள்ள ஒரு மாளிகை. சுற்றிலும் கடல். படகு மூலமாகத்தான் அங்கு போயாக வேண்டும். படகை விட்டு இறங்கினால், சில நூறு அடிகள் தூரத்துக்கு, வெகு சுத்தமான பொன் மணல் பரப்பு.   அதன் பின் பசேல் என்று செடி கொடிகள். இடையே, வெகு கம்பீரமான ஒரு மாளிகை. அந்த மாளிகையின் அழகு, இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது. 'எனக்காகவே நீ' கதையில் வரும் மாளிகை, அதுவே. மேற்குக் கடற்கரயில் வரும் ஒதமும், அலைகளும், கடலின் அழகும்.... சிறு வயதில் கடல் அருகிலேயே வளர்ந்ததும் இந்தக் கதையில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.

ஊட்டியும், கொடைக்கானாலும்,, குன்னூரும், அங்குள்ள எஸ்டேட்டுகளும்

சின்ன வயதில் தந்தையோடு, குற்றாலம், கன்யாகுமரி என்று ஒரு தரம் சென்றோம். அப்போது ஒரு மாளிகையின் ஒரு பகுதியில் தங்கினோம். சிதிலமாகிக் கொண்டிருந்த மாளிகை. அதுவே 'காத்திருக்கிறேன் ராஜகுமாரவில்' வருவது.

தாத்தா வீட்டு மாந்தோப்பும், அதில் இருந்த இனிப்பு மாங்காய் மரங்களும், அருகில் இருந்த ஒன்று விட்ட மாமா வீட்டில் இருந்த பலவகை மாமரங்களும், மறக்க முடியாதவையே. பல கதைகளில், எந்த மாந்தோப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கானமழை நீ எனக்கு, சுகம் தரும் சொந்தங்களே.... இன்னும் பல.

மலேஷியாவுக்கு ஒரு தரம் போய் வந்தேன். அழகான மலைநாடு. எப்படியும் மூன்று நாட்களுக்கு மேல் மழை பெய்யாமல் இருக்காது என்றார்கள். மழையின் பரிசாக எங்கும் பசுமையும், மரம்,

Ramanichandran Life Story 5