அமைந்திருந்தனவாம். முற்றத்தில் அமர்ந்து, இரண்டு கோட்டை கட்டிய நிலவை, அதிசயத்துடன் பார்த்துவிட்டுப் போய், என்னை
பெற்றதாக, என் அம்மா சொன்நதுண்டு.
நவராத்திரிக்கு வீட்டில் பதினோரு படிகள் கொலு வைப்போம். அதற்காக நிறைய பொம்மைகள் வாங்கி வைத்திருந்தார்கள்.
ஆனால் இன்று போல படிகள் எல்லாம் அப்போது கிடையாது. மேஜை, சின்ன மேஜை, அவற்றின் இழுப்பறைகள், இவை போன்றவற்றை வைத்து
அடுக்குவோம். டைரக்ஷன் அம்மா தான். எனக்கும் என் சகோதரிக்கும், ராதை, கண்ணன் மாதிரி அலங்காரம் செய்து, கொலுவுக்கு
அழைக்க அனுப்புவார்கள்.
அம்மாவைப்பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே போகலாம்.
கொடிய நோயால் பாதிக்கப் பட்டிருந்த போதும், அந்த வலியை சகித்துக் கொண்ட திடம். கடைசிநேரம் என்று அறிந்தபோதும்,
பதறாமல், கலங்காமல், கடவுள் அழைப்பதாகச் சொல்லி, அவரிடம் போய்ச் சேர்ந்த விதம்.
என் கதாநாயகிகளிடம் என் அம்மாவின் தன்மைகளில் பாதி வெளிப்படிருந்தாலும் போதுமே. நாயகர்களிடம், என் தந்தையின்
தைரியமும் துணிச்சலும்.
என்னைக் கதை எழுதத் தூண்டியவர் என் ச்தகோதரியின் கணவரே. பெரிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்த அவர், நான் என்
தங்கைக்கு எழுதிய கடிதங்களைப் படித்து விட்டு, கதை எழுதுமாறு எனக்கு ஊக்கம் கொடுத்தார்.
பாலசந்திரனின் மனைவியான ரமணி. 'ரமணிச்சந்திரன்' ஆனதும் அவரது செயலே.
அனால், ஒரு கட்டத்தில், நம் கதைகள் உண்மையிலேயே தரமுள்ளவையா, அன்றி, இந்த உறவு முறைக்காகப் பிரசுரம் ஆகின்றனவா
என்று, என் மனம் சற்றுக் கலங்கியது உண்டு.
அப்போது, வேறு பெயர், முகவரியில், ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்ப, அதற்குப் பரிசுக் கிடைக்கவே, பரிசுடன்
சேர்ந்து, மன அமைதியும் கிடைத்தது.
பொதுவாக, நான் பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளை வைத்துக் கதை புரிய எனக்குத் தயக்கமாக இருக்கும். நான் பார்த்த கோணம்
சரியில்லாமல் போகலாம். என்னிடம் சொன்னவர்கள் அவர்களது அபிப்பிராயத்தைப் புகுத்திகச் சொல்லியிருக்கலாம். இது போன்ற
நிகழ்ச்சிகளைக்கொண்டு எழுதுவது, எப்படிச் சரியாகும் என்ற யோசனையில், அப்படி எழுதாமலே விட்டுவிடுவேன்.
அனால், "உங்கள் இந்தக் கதையில் போல, என் வாழ்வில் நடந்திருக்கிறது" என்று முன்பின் அறியாத அன்னியர்கள்
சொல்லியிருக்கிறார்கள். கேட்கும்போது, ஆச்சரியமாக இருக்கும்.
அதே போல, என் கதையில் கண்டது போல, உறுதியோடு உழைத்து முன்னேறப் போவதாகச் சொல்ல்லும்போது, சந்தோஷமாக இருக்கும்.
Ramanichandran Life Story4
|