அப்போதுதான் கம்ப்யூடரில் இரு விரல்களால் தட்டி எழுதத் தொடங்கினேன். இப்போதும் அப்படித்தான. முறையான பயிற்சி இல்லை என்றாலும், வேகம் வந்து விட்டது. 'சித்திரமும் கைப்பழக்கம்' தானே?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் எழுதத் தொடங்கினேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நீண்ட நெடு காலக் கட்டத்தில், என்னைச் சுற்றிலும் உள்ள உலகம்தான், என்னமாக மாறிவிட்டது.

போன் பண்ணக்கூடிய இடம் தேடி அலைந்தது மாறி, இப்போது எல்லாரது கையிலும் ஒரு செல்போன். செல்போன், அடுக்குமாடி வீடு, உடை மாற்றங்கள், விஞ்ஞான மாற்றங்கள், மன நிலை மாறு பாடுகள்... எல்லாம் மனதில் கொண்டுதான் கதைகளை அமைக்கிறேன்.

ரஷ்யாவில் பிச்சைக்காரனைப் பற்றி சொன்னால், இளம் தலை முறையினருக்குப் புரியாது என்று சொல்வார்கள். யாசகம் அங்கே ஒழிக்கப்பட்டு, சில தலை முறைகள் ஆகி விட்டதால்.

அப்படி யாருக்கும் புரியாதது எதுவும் என் கதைகளில் இருக்கக் கூடாது என்பது என் ஆசை. நடை, உடை, பாவனை, எண்ணப்போக்கு, அனைத்தையுமே அப்படி யோசித்துதான் எழுதுறேன்.

எந்த அளவு வெற்றி கிட்டியிருக்கிறது என்பதை, வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

எழுத்துக்கான விருதுகள் சில பல கிடைத்திருக்கின்றன. ஆனால், வாசகர்களான உங்கள் ஆதரவுதான் மிகப் பெரிய விருது அல்லவா? அந்த விருதுக்குத தகுதியுள்ளவளாக எப்போதும் இருக்கக் கடவுள் அருளவேண்டும்.

காகிதம் காலத்தினால் பழுப்படைந்து, உடைந்து உதிர்வதுண்டு.

என் புத்தகங்களை என் ஒப்புதலோடு, எந்தக் காலத்திலும் அழியாத 'ஈ' புத்தகங்களாக வெளியிடுவது சங்கப்பலகையே.

அன்புடன்,

ரமணிச்சந்திரன்

பின் குறிப்பு - கையில் புத்தகமாக வைத்துப் படிக்க விரும்புவர்களுக்கு ஒரு விவரம். காகிதப் புத்தகங்கள் அத்தனையும் கிடைக்கும் இடங்கள்

௧. கார்த்திக் புக் ஷாப்

௩௦, தெற்கு மாட வீதி,

மயிலாப்பூர்,

சென்னை - 600004

செல் - 9941143383

போன் - 24958186

௨. அருணோதயம்

5/3 கௌடியா மடம் சாலை,

ராயப்பேட்டை,

சென்னை - 600014

போன் - 28132791

Buy the books online and read immediately at http://www.sangapalagai.com